மின் கணக்கீடு செயவதற்கு புதிய செயலியை உருவாக்க அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுரை!
மின் கணக்கீட்டை அறிந்து கொள்ள புதிய செயலியை அறிமுகப்படுத்துமாறு அதிகாரிகளிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் எரிசக்தித்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய முதலமைச்சர், மின் நுகர்வோர்களுக்கான சேவையை மேலும் மேம்படுத்த மின் அளவீடு மற்றும் கணக்கீட்டை மொபைல் மூலம் அறிந்து கொள்ளும் வகையில் புதிய செயலியை அறிமுகப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.
மேலும் குறைந்த மின்னழுத்த குறைபாடுகளை சரிசெய்யும் வகையில் திட்டங்களை வகுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.