ஈ.பி பில் கட்டவில்லை.. மெசேஜ் வந்தால் கிளிக் பண்ணாதீங்க - மின் வாரியம் எச்சரிக்கை!
மின் கட்டணம் கட்டவில்லை என்று மோசடி மெசேஜ் வருவதாக மின் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மோசடி
தொழில்நுட்பம் வளர்ந்ததும் மோசடிகளும் சேர்ந்து வளந்துகொண்டே போகிறது. சமீபத்தில் மொபைல் போனுக்கு வரும் குறுஞ்செய்தியில் உள்ள லிங்கை கிளிக் செய்தால் போதும் நமது வங்கி கணக்கில் இருக்கும் பணம் பறிபோகும் நிலை உருவாகியுள்ளது. இது குறித்து பல புகார்கள் வந்த வண்ணம் தான் உள்ளது.
தற்பொழுது உங்கள் வீட்டில் மின் கட்டணம் கட்டவில்லையெனவும், இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட இருப்பதாக தெரிவித்து மெசேஜ் வரும் இதனை திறந்து பார்த்தால் அதில் ஒரு லிங்க் இருக்கும். இதனை திறந்தால் நமது வங்கியில் உள்ள பணம் திருடப்படும் நிலை உருவாகியுள்ளது.
எச்சரிக்கை
இந்நிலையில், இந்த மோசடி தொடர்ந்து புகார் வந்துள்ளது, அதனால் தமிழ்நாடு மின்சார வாரியம் எச்சரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஈ.பி பில் கட்டாததால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என குறுஞ்செய்தி வந்தால் கவனமாக இருக்க வேண்டும் என கூறியுள்ளது.
ஈ.பி பில் கட்டாததால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என குறுஞ்செய்தி வந்தால் கவனம்!
— TANGEDCO Official (@TANGEDCO_Offcl) October 31, 2023
1. பதட்டம் அடைய வேண்டாம்
2. உங்கள் பில் நிலைப்பாடு சரி பார்க்கவும்
3. அந்த எண்ணை தொடர்பு கொள்ள வேண்டாம்
4. இணைய லிங்கக்கை கிளிக் செய்ய வேண்டாம்
5. உடனடியாக 1930 ஐ அழைத்து புகார் அளிக்கவும்
6.… pic.twitter.com/0MjuauVPx9
மேலும், அவ்வாறு மெசேஜ் வந்தால், பதட்டம் அடைய வேண்டாம், உங்கள் பில் நிலைப்பாடு சரி பார்க்கவும், அந்த எண்ணை தொடர்பு கொள்ள வேண்டாம், இணைய லிங்கக்கை கிளிக் செய்ய வேண்டாம், உடனடியாக 1930ஐ அழைத்து புகார் அளிக்கவும், உறவினர்கள், நண்பர்களுக்கு தகவலை பகிரவும் என தெரிவித்துள்ளது.