மின் கட்டணத்தில் அதிரடி தள்ளுபடி: மாநில அரசு அறிவிப்பு
Uttarakhand
Eb bill
By Petchi Avudaiappan
மின் கட்டணத்தில் இருந்து விலக்கு அளித்து உத்தரகாண்ட் மாநில அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி முதல் 100 யூனிட் மின் பயன்பாட்டிற்கான கட்டணத்தில் விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது 101 முதல் 200 யூனிட் வரையிலான மின் பயன்பாட்டில் 50 சதவிகித தள்ளுபடியும் அளிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள மாநில மின்துறை அமைச்சர் ஹரக் சிங் ராவத், உத்தராகண்ட் மாநிலத்தில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே மின் பயன்பாடு கணக்கிடப்படுகிறது. அதனடிப்படையில்தான் மின்சார கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஆனால் தற்போது உத்தராகண்ட் அரசு அறிவித்துள்ள இலவச பயன்பாட்டுக்கான கணக்கீடு மாதந்தோறும் கணக்கிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.