இனி இரண்டு வேளை உணவு மட்டும்தான் - இலங்கை பிரதமர் எச்சரிக்கை!

Ranil Wickremesinghe Wickremesinghe Ranil Sri Lanka Sri Lanka Food Crisis
By Sumathi Jun 05, 2022 05:34 AM GMT
Report

இலங்கை தற்போது நெருக்கடியின் தொடக்க நிலையில்தான் உள்ளது என்றும், மோசமான விஷயங்கள் இனிதான் வரப்போகிறது என்று அந்நாட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.

பில்லியன் டாலர்கள் தேவை

மக்கள் தினமும் இரண்டு வேளை உணவு மட்டுமே உண்ணும் நிலை உருவாகும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். பொருளாதார நெருக்கடியை சரிசெய்ய, இலங்கை அரசு நட்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது என்று கூறியுள்ள அவர், சில பில்லியன் டாலர்கள் தேவைப்படுகிறது.

இனி இரண்டு வேளை உணவு மட்டும்தான் - இலங்கை பிரதமர் எச்சரிக்கை! | Eating Only Twice A Day Sri Lankan Pm Warns

அதுகிடைக்காவிட்டால் நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும், இலங்கை தனது தவறுக்காக மன்னிப்பு கோருவதும், உதவிக்காக நண்பர்களை உருவாக்குவதும் அவசியம் என கூறியுள்ளார். இலங்கை மன்றக்கல்லூரி நிகழ்வில் பேசிய பிரதமர், தற்போது எரிபொருளிற்கான வரிசைகள் இல்லை.

உணவு விநியோகம்

பிரதமருக்கான கடமைகளை மாத்திரம் நிறைவேற்றவில்லை என்றும் தீயணைப்பு வீரரின் பணிகளையும் செய்கின்றேன் என்பது உங்களில் பலருக்கு தெரியாது. பெரும்போகத்திற்கான போதியளவு உரங்கள் இல்லாததால் செப்டம்பர், அக்டோபர் வரை நாட்டில் உணவு விநியோகம் நீடிக்கும்.

இனி இரண்டு வேளை உணவு மட்டும்தான் - இலங்கை பிரதமர் எச்சரிக்கை! | Eating Only Twice A Day Sri Lankan Pm Warns

அதிர்ஷ்டவசமாக இந்தியா உதவ முன்வந்துள்ளது என்றும் ஏனைய நாடுகளும் உதவுகின்றன. இலங்கையை இரண்டு பிரச்சனைகள் பாதிக்கின்றன அதில் ஒன்று ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டது, அது பொருளாதார பிரச்சனை. இதன் தொடர்ச்சியாக அரசியல் நெருக்கடி உருவாகியுள்ளது என தெரிவித்துள்ளார்.