தினமும் முட்டை சாப்பிட்டால் நீரிழிவு பிரச்சினை அதிகமாகுமா? வெளியான அதிர்ச்சி தகவல்
புரதம் அதிகம் வேண்டும் என்பவர்கள் தங்களுடைய உணவில் முட்டையை அதிகமாகச் சேர்த்துக் கொள்வது ஏனெனில் முழுக்க முழுக்க புரதம் நிறைந்த உணவு என்றால் அதில் முட்டை முதன்மையானதாக இருக்கிறது.
நிறைய பேர் தங்கள் காலை உணவில் முட்டையை சேர்த்து வருகின்றனர். முட்டையில் நம் உடலுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் காணப்படுகிறது.
அதேசமயம் அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது டைப் 2 நீரிழிவை அது தூண்டும் என்றும் சொல்லப்படுகிறது. ஒருவர் தினமும் குறைந்தது 1-2 முட்டைகளைச் சாப்பிடுவது அவசியம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஆனால் சிலரோ தங்களுடைய மூன்று வேளை உணவிலும் ஏதேனும் ஒரு வகையில் முட்டையைச் சேர்த்துக் கொள்கிறார்கள்.
அப்படி அதிக அளவில் முட்டை சாப்பிடுவது வாயுத்தொல்லை, அஜீரணம் போன்ற பிரச்சினைகளை மட்டும் ஏற்படுத்தும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அது நீரிழிவு நோயையும் தூண்டும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஒருவர் தினமும் குறைந்தது 1-2 முட்டைகளைச் சாப்பிடுவது அவசியம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால் சிலரோ தங்களுடைய மூன்று வேளை உணவிலும் ஏதேனும் ஒரு வகையில் முட்டையைச் சேர்த்துக் கொள்கிறார்கள்.
அப்படி அதிக அளவில் முட்டை சாப்பிடுவது வாயுத்தொல்லை, அஜீரணம் போன்ற பிரச்சினைகளை மட்டும் ஏற்படுத்தும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அது நீரிழிவு நோயையும் தூண்டும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உணவானது நீரிழிவு நோயில் எந்தளவு முக்கிய வகிக்கிறது என்பதைப் புரிந்து கொள்வது மிக அவசியம். உணவு தான் டைப் 2 நீரிழிவு நோயின் தொடக்கத்தில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.
நாம் ஆரோக்கியமற்ற உணவுகளை எடுத்துக் கொள்ளும்போது கொஞ்சம் கொஞ்சமாக நாம் நீரிழிவு நோய் வரம்புக்குள் செல்கிறோம் என்று அர்த்தம்.
ஏனெனில் இன்றைய காலகட்டத்தில் பலர் பாரம்பரிய உணவுக் காய்கறிகள் மற்றும் பழங்களில் இருந்து விலகி அதிகளவு இறைச்சி எடுத்துக் கொள்வது, செயற்கை பானங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், துரித உணவுகள்,
அதிக அளவிலான சர்க்கரை மற்றும் உப்பு சாப்பிடுவது மற்றும் சரியான தூக்கமின்மை, இரவு நீண்ட நேரம் விழித்திருப்பது, செல்போன், லேப்டாப்கள் அதிகமாக பயன்படுத்துவது போன்ற பல்வேறு வகை வாழ்க்கை முறை மாற்றத்துக்கு ஆளாவதும் நீரிழிவு பிரச்சினையைத் தூண்டும் அபாயத்தை ஏற்படுத்துகிறது என்பதை மறந்துவிடாதீர்கள்.