Beauty Tips: பளபளப்பான சருமத்திற்கு இதை செய்தால் போதும்
இன்றைய காலகட்டத்தில் எல்லோருமே அவர்களுடைய சருமத்தை பராமரிப்பதற்கு சில நேரத்தை ஒதுக்குகிறார்கள். அதிலும் பலர் வீடுகளில் இயற்கை முறையில் அவர்களுடைய சருமத்தை பாதுகாப்பதற்கு ஆசை கொள்கிறார்கள்.
அந்த வகையில் நம் வீடுகளில் இருக்கக்கூடிய எளிய பொருட்களைக் கொண்டு உடனடியாக சருமத்தை பளபளப்பாக்குவதற்கு என்ன செய்ய வேண்டும்? என்பதை பற்றி பார்ப்போம்.
கடைகளில் விற்கக் கூடிய சரும பொருட்களில் சிட்ரஸ் பழங்களையே மூலப்பொருட்களாகக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. அதிக பணம் செலவழித்து அந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துவதை காட்டிலும் வீடுகளிலே நாம் அதை எளிய முறையில் தயார் செய்யும் பொழுது சருமமும் பாதுகாப்பாக இருக்கும்.

1. ஒரு சிலருக்கு முகத்தில் கரும்புள்ளிகள், கறைகள் இருந்தால் அவர்கள் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன் ஒரு டீஸ்பூன் ஓட்ஸ் மற்றும் தக்காளியை சேர்த்து முகத்தில் நன்றாக தேய்த்து வாருங்கள்.
எலுமிச்சையில் இருக்கின்ற வைட்டமின் சி உங்கள் சருமத்தை பாக்டீரியாவிடமிருந்து பாதுகாக்கிறது. அதைப்போல் ஓட்ஸ் சருமத்தில் இருக்கின்ற அழுக்கை அகற்றும், தக்காளி முகப்பொலிவை கொடுக்கும்.
2. உங்களுடைய சருமம் நல்ல பொலிவாக இருப்பதற்கு ஆரஞ்சு தோல் பகுதியை சில நாட்கள் காய வைத்து அரைத்து அதில் இரண்டு டீஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் அரை எலுமிச்சையை பிழிந்து சாறை கலந்து பேஸ்ட் ஆக்கி முகத்தில் தடவி வரலாம். இதை வாரத்தில் இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு 15 நிமிடங்கள் முகத்தில் தடவி காய வைத்து நன்றாக கழுவி வர முகம் நல்ல பொலிவடையும்.

3. சிலர் அடிக்கடி வேலைக்காக வெயிலில் செல்ல நேரும். அதனால் முகத்தில் நிறைய அழுக்குகள் சேர்ந்து விடும். அவர்கள் தேன் மற்றும் மஞ்சள் கலந்து அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து 15 நிமிடங்கள் முகத்தில் தேய்த்து காயவிட்டு பிறகு நன்றாக கழுவி வர முகத்தில் இருக்கக்கூடிய அழுக்குகள் எல்லாம் சுத்தமாக நீங்கிவிடும்.
இதை வாரம் ஒரு முறை நீங்கள் பயன்படுத்தி வரலாம். இதில் தேன் சருமத்திற்கு மாய்ஸ்ச்சரைஸ் கொடுக்கும். மஞ்சள் கிருமிகளை அழித்து ஆரோக்கியமான சருமத்தை வழங்கும்.
பின் குறிப்பு:
எல்லாருடைய சருமமும் ஒரே மாதிரி இருப்பது அல்ல. ஆதலால் எந்த ஒரு பொருட்களை நீங்கள் முகத்தில் பயன்படுத்த வேண்டும் என்று முயலும் பொழுது சிறிய அளவு பேட்ச் போல உங்கள் கைகளில் அல்லது கழுத்து பகுதிகளில் தேய்த்து எரிச்சல் மற்றும் அலர்ஜி ஏற்படாத பட்சத்தில் நீங்கள் அதை பயமில்லாமல் பயன்படுத்தி வரலாம்.