உலகம் முழுவதும் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம் கோலகலம் - தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளாக கருதப்படும் ஈஸ்டர் தினம் இன்று விழுப்புரம் மாவட்டம் முழுக்க கொண்டாடப்படுகிறது.
ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம்
புனித வெள்ளி தினம் இயேசு கிறிஸ்து மரிக்கும் நாளாகவும், ஈஸ்டர் தினம் அவர் உயிர்த்தெழும் நாளாகவும் கிறிஸ்தவர்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

கிறிஸ்துவர்களுக்கு இது மிகவும் முக்கியமான நாளாகும். இந்த நிலையில் ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு இன்று விழுப்புரம், செஞ்சி, திண்டிவனம், திருக்கோவிலூர், வானூர்,ஒரத்தூர், முட்டத்தூர், கக்கனூர், கஞ்சனூர், முகையூர், உள்ளிட்ட மாவட்ட முழுவதும் கிறிஸ்துவ தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
மாவட்ட முழுவதும் உள்ள தேவாலயங்களில் நல்லிரவு நேரம்,அதிகாலை வழிபாட்டு கூட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த வழிபாட்டில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்