ரிவர்ஸில் சுழல தொடங்கிய பூமியின் மையம்...ஏன் இந்த மாற்றம் - பகீர் தரும் விஞ்ஞானிகள் !
பூமியின் மையம் தலைக்கீழாக சுழல்வதாக கண்ண்டறியப்பட்டுள்ளது.
பூமியின் மையம்
Crust, mantle, வெளிப்புற மையம் மற்றும் உள்புற மையம் ஆகிய 4 அடுக்குகளாக இந்த பூமி அமைந்திருக்கிறது. அதாவது நமது பூமி ஒட்டுமொத்தமாக ஒரு சுழற்றிச் பாதையில் சுற்றும் வேலையில் உள்ளே இருக்கும் திடமான INNER CORE என அழைக்கப்படும் பந்து போன்ற அமைப்பு தனிச்சையாக சுற்றி வருகிறது.
குறிப்பாக இந்த இன்னர் கோரின் சுழற்சி வேகம் மற்றும் திசை ஆகியவை குறித்துத் தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வருகிறது. முதலில் இந்த இன்னர் கோர் கண்டறியப்பட்டதில் இருந்து இதன் சுழற்சி கணிசமாக மாறிவிட்டதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
ஏன் இந்த மாற்றம்
இருப்பினும் இந்த மாற்றத்திற்கான பின்னணி என்ன என்பதில் ஆய்வாளர்களிடையே இரு வேறு கருத்துகள் நிலவுகிறது. இதனை ஆய்வு செய்வதில் முக்கிய சவால் என்னவென்றால் இன்னர் கோரை நேரடியாக பார்க்க முடியாது.
எனவே அதை ஆய்வு செய்ய பூமியில் பெரிய நிலநடுக்கங்கள் ஏற்படும் போது அப்போது ஏற்படும் அலைகள் எந்த திசையில் வருகிறது என்பதை வைத்தே இந்த இன்னர் கோர் குறித்து மேற்கொள்ளப்படுகிறது. இது தொடர்பாக விஞ்ஞானிகள் கூறுகையில், "முதலில் இன்னர் கோர் ஒரே திசையில் தான் சுற்றும் என்றே ஆய்வாளர்கள் கருதினர்.
1970களில் தான் முதல்முறையாக இன்னர் கோர் சுழலும் திசை அவ்வப்போதும் மாறும் என்ற கோட்பாடு முன்வைக்கப்பட்டது. ஆனால், அப்போது அதைப் பலரும் ஏற்கவில்லை.. ஆனால் 90களில் இன்னர் கோர் திசை மாறுவதற்கான ஆதாரங்கள் நமக்குக் கிடைத்தன" என்றார்.