நேபாளத்தில் அடுத்தடுத்து 3 நிலநடுக்கங்கள் 6பேர் உயிரிழப்பு : பீதியில் பொதுமக்கள்

By Irumporai Nov 09, 2022 01:38 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

நேபாள நாட்டின் மேற்கே டோடி மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் அடுத்தடுத்து 3 நிலநடுக்கங்கள் ஏற்பட்டு உள்ளன. இதில் சிக்கி இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள்து.

நேபாள் நாட்டில் நிலநடுக்கம்

இதுபற்றி அந்நாட்டின் தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் வெளியிட்டு உள்ள செய்தியில், நேபாள நாட்டின் மேற்கே நேற்றிரவு 9.07 மணியளவில் ரிக்டரில் 5.7 அளவிலான கடுமையான நிலநடுக்கம் பதிவானது

மிண்டும் அதே பகுதியில் இரவு 9.56 மணியளவில் ரிக்டரில் 4.1 அளவிலான மற்றொரு நிலநடுக்கம் உணரப்பட்டது. இதன்பின்னர் இன்று அதிகாலை 2.12 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.6 ஆக பதிவானது. இதில் வீடு இடிந்து 6பேர் உயிரிழந்து உள்ளனர்.

நேபாளத்தில் அடுத்தடுத்து 3 நிலநடுக்கங்கள் 6பேர் உயிரிழப்பு : பீதியில் பொதுமக்கள் | Earthquakes In Nepal 3 People Lost

டெல்லியிலும் உணரபட்டது

இந்த சம்பவம் கைராகாவன் பகுதியில் ஏற்பட்டு உள்ளது. இதனை பூர்பிசவுக்கி கிராம கவுன்சில் தலைவர் ராம் பிரசாத் உபாத்யாய் உறுதிப்படுத்தி உள்ளார். இந்த நிலநடுக்கங்கள் இந்தியாவின் புதுடெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பிற பகுதிகளிலும் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது