காஷ்மீரில் அடுத்தடுத்து 6 முறை நிலநடுக்கம் - அதிர்ச்சியில் உறைந்த மக்கள்..!

Earthquake Jammu And Kashmir
By Thahir Jun 18, 2023 09:01 AM GMT
Report

ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் 6 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அடுத்தடுத்து நிலநடுக்கம் 

ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் 6 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் முதல் நிலநடுக்கம் நேற்று (சனிக்கிழமை) பிற்பகல் 2.03 மணியளவில், ஜம்மு காஷ்மீரின் மலைப்பாங்கான ரம்பன் மாவட்டத்தில் 3.0 ரிக்டர் அளவில் ஏற்பட்டுள்ளது.

earthquakes-hit-jammu-kashmir-katra-ladakh

இரண்டாவது நிலநடுக்கம் லடாக்கின் லே பகுதியில் இரவு 9.44 மணியளவில் 4.5 ரிக்டர் அளவில் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.

இந்தியா-சீனா எல்லை அருகே நிலநடுக்கம் ஏற்பட்ட 15 நிமிடங்களில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் இரவு 9.55 மணியளவில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இன்று அதிகாலை 2:16 மணியளவில் 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், லடாக்கில் உள்ள லே மாவட்டத்திலிருந்து 295 கிமீ வடகிழக்கே மீண்டும் ஏற்பட்டுள்ளது.

மேலும், ஐந்தாவது மற்றும் கடைசி நிலநடுக்கம் ஜம்மு காஷ்மீரில் உள்ள கத்ராவிலிருந்து கிழக்கே 80 கிமீ தொலைவில் 11 கிமீ ஆழத்தில் 4.1 ரிக்டர் அளவில் ஏற்பட்டுள்ளது என்று நிலஅதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.