துருக்கி நிலநடுக்கத்தில் இடிந்து தரைமட்டமான புகழ்பெற்ற காசியான்டெப் கோட்டை - வைரல் வீடியோ..!

Viral Video Turkey Syria Earthquake
By Nandhini Feb 06, 2023 12:03 PM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

துருக்கி நிலநடுக்கத்தில் புகழ்பெற்ற காசியான்டெப் கோட்டை இடிந்து தரைமட்டமாகியுள்ளது. 

துருக்கி நிலநடுக்கம் -

துருக்கி, சிரியாவில் பயங்கர நிலநடுக்கம் துருக்கியில் இன்று (திங்கள்கிழமை) 7.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த பயங்கர நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாயின.

இந்த நிலநடுக்கத்தில் 2,323க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1000த்தையும் தாண்டியுள்ளது.

earthquake-turkey-syria--gaziantep-castle

தரைமட்டமான காசியான்டெப் கோட்டை

இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், நிலநடுக்கத்தில் இடிந்து போன புகழ்பெற்ற காசியான்டெப் கோட்டை அந்த வீடியோவில், 2,200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட காசியான்டெப் கோட்டை, நிலநடுக்கத்தின் போது இடிந்து விழுந்தது.

தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி உலக மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.