துருக்கியில் நிலநடுக்கம் - துயர் துடைக்க அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயார்... - பிரதமர் மோடி டுவிட்..!
நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டுள்ள துருக்கியின் இந்த துயரத்தை சமாளிக்க இந்தியா அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக உள்ளதாக இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
துருக்கி பயங்கர நிலநடுக்கம்
துருக்கி, சிரியாவில் பயங்கர நிலநடுக்கம் துருக்கியில் இன்று (திங்கள்கிழமை) 7.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த பயங்கர நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாயின. மத்திய துருக்கியில் 9.9 கிமீ ஆழத்தில் தாக்கியது. இந்த நிலநடுக்கத்தில் பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. பல்லாயிரக்கணக்கானோர் இடிபாடுகளில் சிக்கினர்.
இந்த நிலநடுக்கத்தில் 2,323க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 640ஆக உயர்ந்துள்ளது. இன்னும் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
பிரதமர் மோடி இரங்கல்
நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டுள்ள துருக்கியின் இந்த துயரத்தை சமாளிக்க இந்தியா அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக உள்ளதாக இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இது குறித்து இந்திய பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில்,
துருக்கியில் நிலநடுக்கத்தால் உயிர் சேதம் மற்றும் உடமைகள் சேதம் அடைந்ததால் வேதனை அடைந்துள்ளனர். உயிரிழந்த குடும்பங்களுக்கு அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். துருக்கி மக்களுடன் இந்தியா ஒற்றுமையாக நிற்கிறது மற்றும் இந்த துயரத்தை சமாளிக்க அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக உள்ளது என்று பதிவிட்டுள்ளார்.
Anguished by the loss of lives and damage of property due to the Earthquake in Turkey. Condolences to the bereaved families. May the injured recover soon. India stands in solidarity with the people of Turkey and is ready to offer all possible assistance to cope with this tragedy. https://t.co/vYYJWiEjDQ
— Narendra Modi (@narendramodi) February 6, 2023

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.