துருக்கியில் நிலநடுக்கம் - பலி எண்ணிக்கை 1300 ஆக உயர்வு...!
துருக்கியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1300 ஆக உயர்ந்துள்ளது.
துருக்கியில் நிலநடுக்கம்
துருக்கி இன்று காலை பயங்கர நிலநடுக்கம் துருக்கி, சிரியாவில் பயங்கர நிலநடுக்கம் துருக்கியில் இன்று (திங்கள்கிழமை) 7.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த பயங்கர நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாயின. மத்திய துருக்கியில் 9.9 கிமீ ஆழத்தில் தாக்கியது. இந்த நிலநடுக்கத்தில் பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. பல்லாயிரக்கணக்கானோர் இடிபாடுகளில் சிக்கினர்.
இந்த நிலநடுக்கத்தில் 2,323க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1000த்தையும் தாண்டியுள்ளது. இன்னும் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

பலி எண்ணிக்கை 1300 ஆக உயர்வு
இந்நிலையில், சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் துருக்கி, சிரியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,300த்தை தாண்டியுள்ளது. சிரியாவில் இதுவரை 467 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.