துருக்கியில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - மக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம்..! அதிர்ச்சி வீடியோ...!
துருக்கியில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
துருக்கி இன்று காலை பயங்கர நிலநடுக்கம்
துருக்கி, சிரியாவில் பயங்கர நிலநடுக்கம் துருக்கியில் இன்று (திங்கள்கிழமை) 7.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த பயங்கர நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாயின.
மத்திய துருக்கியில் 9.9 கிமீ ஆழத்தில் தாக்கியது. இந்த நிலநடுக்கத்தில் பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. பல்லாயிரக்கணக்கானோர் இடிபாடுகளில் சிக்கினர். இந்த நிலநடுக்கத்தில் 2,323க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1000த்தையும் தாண்டியுள்ளது. இன்னும் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம்
இந்நிலையில், துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டபோது மக்கள் வீட்டை விட்டு அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்தனர். அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருவதால் இந்த துருக்கி மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
A new #earthquake of the magnitude 7.8 occurred in #Turkey News Reporter Running and Screaming #TurkeyEarthquake pic.twitter.com/5sRtxaBB3Q
— Amit Sahu (@amitsahujourno) February 6, 2023