துருக்கியில் பேரழிவு - 3 நாட்களுக்கு முன் கணித்து எச்சரிக்கை விடுத்த நபர்... - யார் அவர்...? வைரலாகும் டுவிட்...!

Turkey Syria Earthquake
By Nandhini Feb 06, 2023 12:56 PM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

துருக்கி, சிரியாவில் நிலநடுக்கம் ஏற்படுவதற்கு 3 நாட்களுக்கு முன்பே கணித்த நபரின் குறித்த தகவல் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

3 நாட்களுக்கு முன் கணித்து எச்சரிக்கை விடுத்த நபர்

துருக்கி, சிரியாவில் நிலநடுக்கம் ஏற்பட 3 நாட்களுக்கு முன்பு, ஃபிராங்க் ஹூகர்பீட்ஸ் என்ற டச்சு ஆராய்ச்சியாளர் வரும் திங்கட்கிழமை துருக்கி மற்றும் சிரியாவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்படும் என்று கணித்து டுவிட் செய்தார்.

நெதர்லாந்தைச் சேர்ந்த ஃபிராங்க் ஹூகர்பீட்ஸ் என்பவர் நில அதிர்வு செயல்பாட்டை ஆய்வு செய்யும் சோலார் சிஸ்டம் ஜியோமெட்ரி சர்வேயில் (SSGEOS) ஒரு ஆராய்ச்சியாளர் ஆவார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டார்.

அந்த பதிவில், “விரைவில் அல்லது பின்னர் தென்-மத்திய துருக்கி, ஜோர்டான், சிரியா மற்றும் லெபனானைச் சுற்றியுள்ள பிராந்தியத்தில் 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்து பதிவிட்டார். இந்த டுவிட்டை பார்த்த நெட்டிசன்கள் அவரை போலி விஞ்ஞானி என்று கிண்டலடித்து பதிவு செய்தனர்.

ஆனால், அவர் கூறியதுபோலவே, இன்று துருக்கியில் பயங்கர சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு பேரழிவை சந்தித்துள்ளது. தற்போது இது தொடர்பாக ஃபிராங்க் ஹூகர்பீட்ஸ் டுவிட் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

earthquake-turkey-predicted-frank-hoogerbeets