டெல்லியை உலுக்கும் நிலநடுக்கம்:ஒரே வாரத்தில் 2வது முறை - பீதியில் மக்கள்!
டெல்லியில் ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
டெல்லி
டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புத்தாண்டு அன்று நள்ளிரவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. ஹரியானா மாநிலத்தின் ஜாஜார் பகுதியை மையமாக கொண்டு உணரப்பட்ட
[
நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.8 ஆக பதிவாகியுள்ளது. 12 கிமீ வடமேற்கில் 5 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கம்
நவம்பர் 9, 12 ஆகிய தேதிகளில் டெல்லியிலும், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் அடுத்தடுத்து நிலநடுக்கம் உணரப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தற்போது ஆப்கானிஸ்தானில் உள்ள ஃபைசபாத்தில் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது
டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டது.
காயங்கள் அல்லது சேதங்கள் குறித்து எந்த தகவலும் இல்லை.