வருடத்தின் முதல் நாளே மோசமா ? - டெல்லியில் திடீர் நில அதிர்வு
2023 ஆன்டு பிறந்துள்ள நிலையில் சென்னை தமிழகம் உட்பட பல்வேறு மாவட்டங்களிலும் , பல்வேறு மாநிலங்களிலும் பொது மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.
டெல்லியில் நில அதிர்வு
இந்த நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது டெல்லியில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டதாகவும் நள்ளிரவு 1.19 மணியளவில் இது உணரப்பட்டதாக பொதுமக்கள் சிலர் தெரிவித்திருந்தநிலையில் , தேசிய புவியியல் ஆய்வு மையமும் இந்த தகவலை உறுதிபடுத்தியுள்ளது. அதன்படி ரிக்டர் அளவில் 3.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் ஹரியானாவின் ஜவஹர் நகரில் 5 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது.

முதல் நாளிலே நில அதிர்வு
மேலும், இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உணரப்பட்டதாக தெரிவித்துள்ளது.
ஆண்டின் முதல் நாள் கொண்டாட்டத்தின் போது டெல்லியில் திடீரென நில அதிர்வு உணரப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.