தோண்ட தோண்ட உடல்கள்.. துருக்கி நிலநடுக்கத்தில் இதுவரை 34 ஆயிரத்தை தாண்டும் உயிர் பலி

Turkey Turkey Earthquake
By Irumporai Feb 13, 2023 02:19 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

துருக்கியில் கடந்த வாரம் ஏற்பட்ட மிகபெரிய நிலநடுக்கத்தால் துருக்கி மற்றும் சிரியாவில் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

துருக்கி நிலநடுக்கம்

துருக்கியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக அங்கிருந்த பெரு கட்டிடங்கள் எல்லாம் தரையோடு தரைமட்டம் ஆக்கியது. இதனால் பல்லாயிரக்கணக்கானோர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

மேலும் இந்த இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த ஆயிரக்கணக்கானோரை மீட்புக்குழுவினர் மீட்டு வருகின்றனர். பல சர்வதேச நாடுகளும் தங்களது மீட்புக்குழுவை உதவிக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

தோண்ட தோண்ட உடல்கள்.. துருக்கி நிலநடுக்கத்தில் இதுவரை 34 ஆயிரத்தை தாண்டும் உயிர் பலி | Earthquake The Death Toll Has Crossed

தொடரும் உயிர் பலி

இந்த இடிபாடுகளில் இன்னும் நிறைய பேர் சிக்கியிருக்கலாம், அவர்களது அபயக்குரல் கேட்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கத்திற்கு இதுவரை துருக்கி மற்றும் சிரியாவில் 34,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் வெளிவந்துள்ளது.

மேலும் பலி எண்ணிக்கை 50,000 ஐயும் தாண்டும் என்று கூறப்படுகின்றது.