தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்... - மக்கள் அலறி அடித்து ஓட்டம்...!

Earthquake World
By Nandhini Feb 28, 2023 08:30 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

தஜிகிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்

தஜிகிஸ்தானில் மீண்டும் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 4.8 ரிக்டர் அளவு கோலில் பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டபோது கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி அடைந்து வீட்டை விட்டு வெளியேறினர்.

தஜிகிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

இது தொடர்பாக அந்நாட்டின் தேசிய மையத்தின் தகவலின்படி, இன்று காலை 09:51 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் மையம் பூமிக்கு அடியில் 185 கிமீ ஆழத்தில் இருந்தது என்று குறிப்பிட்டுள்ளது.

தற்போது வரை தஜிகிஸ்தானில் உயிர்சேதமோ சேதமோ, பொருட்சேதமோ குறித்த தகவல் இன்னும் வெளியாக வில்லை.   

earthquake-shakes-tajikistan