சிக்கிமில் நிலநடுக்கம்... - உலுங்கிய கட்டிடங்கள்... - மக்கள் அலறி ஓட்டம்...!

Earthquake Viral Photos
By Nandhini Mar 02, 2023 09:33 AM GMT
Report

சிக்கிமில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

சிக்கிமில் நிலநடுக்கம்

சிக்கிம் யூக்சோமில் மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 4.1 ரிக்டர் அளவு கோலில் பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டபோது கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி அடைந்து வீட்டை விட்டு வெளியேறினர்.

சிக்கிமில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

நிலநடுக்கம் தொடர்பான தேசிய மையத்தின் தகவலின்படி, இன்று மதியம் 1:43 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், நிலநடுக்கத்தின் மையம் 29 கி.மீ. பூமிக்கு அடி ஆழத்தில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்போ அல்லது சேதங்கள் எதுவும் பதிவாகவில்லை.

தற்போது இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

Earthquake of 4.1 Magnitudes Shakes Sikkim