துருக்கியை தொடர்ந்து பாலஸ்தீனத்திலும் நிலநடுக்கம் ஏற்படும் - மீண்டும் எச்சரித்த டச்சு ஆராய்ச்சியாளர் ஃபிராங்க் ஹூகர்பீட்ஸ்...!

Turkey Palestine Turkey Earthquake
By Nandhini Feb 08, 2023 10:20 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

துருக்கியில் பேரழிவுவை 3 நாட்களுக்கு முன் கணித்த நெதர்லாந்தைச் சேர்ந்த ஃபிராங்க் ஹூகர்பீட்ஸ் மீண்டும் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

துருக்கி நிலநடுக்கம் - 3 நாட்களுக்கு முன் கணிப்பு

துருக்கி, சிரியாவில் நிலநடுக்கம் ஏற்பட 3 நாட்களுக்கு முன்பு, ஃபிராங்க் ஹூகர்பீட்ஸ் என்ற டச்சு ஆராய்ச்சியாளர் கடந்த வாரம் வரும் திங்கட்கிழமை துருக்கி மற்றும் சிரியாவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்படும் என்று கணித்து டுவிட் செய்தார்.

நெதர்லாந்தைச் சேர்ந்த ஃபிராங்க் ஹூகர்பீட்ஸ் என்பவர் நில அதிர்வு செயல்பாட்டை ஆய்வு செய்யும் சோலார் சிஸ்டம் ஜியோமெட்ரி சர்வேயில் (SSGEOS)ஒரு ஆராய்ச்சியாளர் ஆவார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டார். அந்த பதிவில், “விரைவில் அல்லது பின்னர் தென்-மத்திய துருக்கி, ஜோர்டான், சிரியா மற்றும் லெபனானைச் சுற்றியுள்ள பிராந்தியத்தில் 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்து பதிவிட்டார்.

இந்த டுவிட்டை பார்த்த நெட்டிசன்கள் அவரை போலி விஞ்ஞானி என்று கிண்டலடித்து பதிவு செய்தனர். ஆனால், அவர் கூறியதுபோலவே, கடந்த திங்கட்கிழமை துருக்கியில் பயங்கர சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு பேரழிவை சந்தித்தது.

தற்போது துருக்கியில் பலி எண்ணிக்கை 9 ஆயிரத்தை தாண்டி சென்றுக்கொண்டிருக்கிறது.

earthquake-palestine-after-turkey-frankhoogerbeets

மீண்டும் எச்சரிக்கை விடுத்த ஃபிராங்க் ஹூகர்பீட்ஸ்

இந்நிலையில், ஃபிராங்க் ஹூகர்பீட்ஸ் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், மத்திய துருக்கியில் ஏற்பட்ட பெரிய நிலநடுக்கங்கள் அப்பகுதி முழுவதும் அழுத்த விநியோகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. இதன் விளைவாக பாலஸ்தீனத்திற்கு நில அதிர்வு நடவடிக்கைகள் உள்ளன. தெளிவாக, இப்பகுதி மீள்குடியேறுகிறது என்று எச்சரிக்கை விடுத்து குறிப்பிட்டுள்ளார்.