இந்தியாவில் தொடர்ந்து மூன்று மாநிலங்களில் நிலநடுக்கம்
night
delhi
jammu
By Jon
இந்தியாவில் மூன்று மாநிலங்களில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்தியா நாட்டின் வடமாநிலங்களான ஜம்மு, டெல்லி, பஞ்சாப்பில் அடுத்தடுத்து இரவில் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்து உள்ளனர்.
இதுபற்றி தேசிய நிலநடுக்கவியல் மையம் வெளியிட்டுள்ள செய்தியில், பஞ்சாப்பின் அமிர்தசரஸ் நகரில் இன்றிரவு 10.34 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 6.1 ஆக பதிவாகி உள்ளது. இதேபோன்று, உத்தரகாண்ட் மாநிலம் மற்றும் நொய்டா நகரிலும் நிலடுக்கம் உணரப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளது.