திரும்பும் பக்கம் எல்லாம் மரண ஓலங்கள் - துருக்கி, சிரியாவில் நிலநடுக்கத்தால் 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழப்பு
துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 4000 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
4000 ஆயிரம் பேர் உயிரிழப்பு
கடந்த திங்கட்கிழமை துருக்கி மற்றும் சிறியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் பெரிய அளவிலான உயிர் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் சுமார் 5606 கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இந்த பயங்கர நிலநடுக்கத்தால் துருக்கியில் கட்டிட இடுபாடுகளில் சிக்கி சுமார் 2379 பேரும், சிரியாவில் சுமார் 1444 பேரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஏறக்குறைய 14,500 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்றைய காலை நிலவரப்படி உயிரிழந்தோர் எண்ணிக்கை சுமார் 4000 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இந்தியாவில் இருந்து விரைந்த மீட்பு படை
திங்கட்கிழமை முதல் நிலநடுக்கம் அதிகாலை 4:17 மணிக்கு (0117 GMT) சுமார் 18 கிலோமீட்டர் (11 மைல்) ஆழத்தில் 2 மில்லியன் மக்கள் வசிக்கும் துருக்கிய நகரமான காசியான்டெப் அருகே தாக்கியது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு தெரிவித்துள்ளது.
துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்ட எட்டு நிமிடங்களுக்குப் பிறகு கிரீன்லாந்தின் கிழக்குக் கடற்கரையை அடைந்ததாக டென்மார்க்கின் புவியியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் பல்வேறு நாடுகளும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி மற்றும் சிறியாவிற்கு உதவி செய்ய முன் வந்துள்ளனர்.

இந்தியாவும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி மற்றும் சிரியாவிற்கு உதவ 101 பேர் அடங்கிய மீட்பு குழுவை அனுப்பி வைத்துள்ளது. அவர்களுடம் இடிபாடுகளில் சிக்கியுள்ளோரை மீட்க மேப்பநாய்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.