சீனாவில் பயங்கர நிலநடுக்கம்... - அலறி அடித்துக் கொண்டு ஓடிய மக்கள்..!

Viral Video China Earthquake
By Nandhini Jan 30, 2023 06:59 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

சீனாவில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

சீனாவில் பயங்கர நிலநடுக்கம்

சீனாவின் ஜின்ஜியாங் உய்குர் சுயாட்சி பகுதிக்கு உட்பட்ட ஆக்சு மாகாணத்தில் ஆரல் என்ற நகரிலிருந்து தென்கிழக்கே 106 கி.மீ. தொலைவில் இன்று அதிகாலை 5.49 மணியளவில் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகியுள்ளது. இத்தகவலை ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல், கிர்கிஸ்தான் நாட்டின் பீஷ்கேக் நகரிலிரந்து கிழக்கு தென்கிழக்கே 726 கி.மீ. தொலைவில் அதிகாலை 5.19 மணியளவில் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கம் ஏற்பட்டபோது, மக்கள் அச்சம் அடைந்து வீட்டை விட்டு வெளியே ஓடிவந்தனர். தற்போது இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமே, பொருட்சேதமோ குறித்து தகவல் வெளியாகவில்லை.   

earthquake-in-china-kyrgyzstan