ஆப்கானிஸ்தானில் தொடரும் நிலநடுக்கம் : அலறியடித்து தெருவுக்கு வந்த மக்கள்
ஆப்கானிஸ்தான் மற்றும் பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்டுள்ள சக்தி வாய்ந்த நில நடுக்கத்தால் மக்கள் பீதியடைந்து வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
ஆப்கானில் நிலநடுக்கம்
ஆப்கான் மற்றும் பப்புவா நியூ கினியாவில் இன்று அதிகாலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை அமெரிக்காவின் புவியல் அறிவியல் ஆய்வுமையம் உறுதிசெய்துள்ளது,சக்திவாய்ந்த நிலநடுக்கம் என்று தெரிவிக்கப்பட்டாலும், சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.

அலறியடித்து ஓடிய மக்கள்
அத்துடன் இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதை அடுத்து பீதியடைந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த முழுமையான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
பைசாபாத்தில் இருந்து கிழக்கே 273 கிலோ மீட்டர் தொலைவில், 180 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாலை 2.14 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அண்மையில் துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து ஆசிய நாடுகளின் பல்வேறு பகுதிகளிலும் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது உலக நாடுகளை கல்லகமடையச்செய்துள்ளது.