துருக்கி, சிரியாவில் பயங்கர நிலநடுக்கம் - உயிரிழந்தோர் எண்ணிக்கை 360 ஆக உயர்வு...!

Earthquake
By Nandhini Feb 06, 2023 07:12 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

துருக்கி மற்றும் சிரியாவைத் தாக்கிய நிலநடுக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 360 ஆக உயர்ந்துள்ளது.

துருக்கி, சிரியாவில் பயங்கர நிலநடுக்கம்

துருக்கியில் இன்று (திங்கள்கிழமை) 7.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த பயங்கர நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு சிரியா, லெபனான் மற்றும் சைப்ரஸ் ஆகிய நாடுகளிலும் உணரப்பட்டது. வடக்கு சிரியாவில் உள்ள அலெப்போவில் சில கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க புவியியல் ஆய்வின்படி, இன்று அதிகாலையில் தெற்கு துருக்கியில் ரிக்டர் அளவுகோலில் 7.8 அளவுள்ள சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது, அதைத் தொடர்ந்து 6.7 ரிக்டர் அளவில் மற்றொரு வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஆரம்ப நிலநடுக்கம் காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டாகி நகருக்கு கிழக்கே 26 கிமீ தொலைவில் 17.9 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

இரண்டாவது சில நிமிடங்களுக்குப் பிறகு மத்திய துருக்கியில் 9.9 கிமீ ஆழத்தில் தாக்கியது. இந்த நிலநடுக்கத்தில் பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. பலர் இடிபாடுகளில் சிக்கித் தவித்து வருகின்றனர்.

earthquake-death-rises-230-turkey-syria

உயிரிழந்தோர் எண்ணிக்கை 360ஆக உயர்வு

இன்று காலை மக்கள் உறங்கிக் கொண்டிருக்கும் போதே கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளது. தற்போது இறப்பு எண்ணிக்கையை நூற்றுக்குமேல் அதிகரித்துக் கொண்டு வருகிறது. இந்த இறப்பு எண்ணிக்கை இன்னும் அதிகமாகும் என்று அஞ்சப்படுகிறது.

இந்த நிலநடுக்கத்தில் 600க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல், சிரியாவின் அரசாங்கக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இதுவரை 360 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிரியாவின் வடக்குப் பகுதிகளில் பலர் உயிரிழந்தனர். 

துருக்கியில் மலாத்யா மாகாணத்தில் குறைந்தது 130 கட்டிடங்கள் இடிந்து விழுந்தன, தியர்பாகிரில் 16 கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நடுக்கம் லெபனான் மற்றும் சைப்ரஸ் போன்ற தொலைதூரத்தில் உணரப்பட்டது.