BREAKING; துருக்கியில் மீண்டும் இன்று நிலநடுக்கம் - மரண ஓலங்கள் அடங்குவதற்குள் அடுத்த நிலஅதிர்வு

Turkey Syria Death Turkey Earthquake
By Thahir Feb 07, 2023 05:02 AM GMT
Report

துருக்கியில் நேற்று 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் இன்று மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டது.

மீண்டும் துருக்கியில் நிலநடுக்கம் 

துருக்கி, மற்றும் சிரியாவில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுமார் 4,300 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே மீண்டும் இன்று 4வது முறையாக நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

Earthquake again today in Turkey

இது ரிக்டர் அளவு கோலில் 5.5க ஆக பதிவாகியுள்ளது. நேற்று 3 முறை ஏற்பட்ட நிலநடுக்கம் குறித்த பீதி அடங்கும் முன்னே மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.   

நேற்று 3 முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது ஏராளமான மக்கள் வீடுகளிலும் அடுக்குமாடி குடியிருப்புகளிலும் இருந்து போது நில அதிர்வால் கட்டிடங்கள் இடிந்து விழுந்தது.

இந்த இடிப்பாடுகளில் சிக்கி ஏராளமான இளைஞர்கள், குழந்தைகள், பெண்கள், முதியோர்கள் உள்ளிட்ட 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் துருக்கி மற்றும் சிரியா நாட்டில் நிகழந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ பல்வேறு நாடுகளும் உதவி செய்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக இந்தியாவும் பேரிடர் மீட்பு குழுவினரை நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி மற்றும் சிரியா நாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளது.