வேகமாக சுழல தொடங்கும் பூமி - ஆராய்ச்சியாளர்கள் குழப்பம்
அதிகரிக்கும் பூமி சுழற்சி
சமீபமாகவே பூமி அதன் சுற்றும் வேகத்தை அதிகரித்துக் கொண்டே வருகின்றது.
1960ம் ஆண்டுக்குப் பிறகு, கடந்த 2020ம் ஆண்டு ஜூலை 19ம் தேதி மிகவும் குறுகிய நாள் பதிவானது. வழக்கமான 24 மணிநேர நாளை விட 1.47 மில்லி விநாடிகள் குறைந்து, அன்றைய தினம் பூமி வழக்கத்தைக் காட்டிலும் வேகமாகச் சுற்றி இருந்தது.
இதனையடுத்து, பூமியின் சுழற்சி விகிதம் தொடர்ந்து அதிகரித்தே கொண்டே வந்தது. பூமி சுழற்சி ஏன் வேகமாகிறது என்பதற்கான காரணம் தெரியவில்லை.
பூமியின் மையப் பகுதி, வெளிப்புற அடுக்குகள், கடல்கள், அலைகளில் ஏற்படும் மாற்றம், காலநிலை இதற்கு காரணமாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை
சர்வதேச அளவில் நேரத்தை ஒழுங்குபடுத்தும் ஒருங்கிணைந்த யுனிவர்சல் டைம் ஏற்கனவே 27 முறை லீப் நொடிகளை அட்ஜெஸ்ட் செய்திருக்கிறது.
இது மாதிரியான நிகழ்வுகள் அடிக்கடி நடந்தால், அது தொழில்நுட்ப ரீதியாக மட்டுமின்றி இயற்கையிலும் கூட சில மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது.