வேலூரில் 3வது முறையாக நில அதிர்வு – அச்சமடைந்த மக்கள்
vellore
earth-quake
By Nandhini
வேலூர் மாவட்டத்தில் 3வது முறையாக நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பேரணாம்பட்டுவில் இன்று காலை 9.30 மணி அளவில் அடுத்தடுத்து 2 முறை லேசான நில அதிர்வை உணர்ந்ததாக மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
சுமார் 3 வினாடிகள் நில அதிர்வு நீடித்ததாக அப்பகுதி பொதுமக்கள் கூறியுள்ளனர்.
ஏற்கனவே, பேரணாம்பட்டு சுற்று வட்டாரத்தில் கடந்த நவம்பர் 29ம் தேதி மற்றும் டிசம்பர் 23ம் தேதி நில அதிர்வு உணரப்பட்ட நிலையில், மீண்டும் இன்று நில அதிர்வு ஏற்பட்டிருக்கிறது. வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து 3வது முறையாக நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் மிகுந்த அச்சமடைந்திருக்கிறார்கள்.