நாளை நிகழ உள்ள சந்திர கிரகணம் - திருப்பதி கோவில் 11 மணி நேரம் நடை மூடல்..!

India Andhra Pradesh
By Nandhini Nov 07, 2022 08:15 AM GMT
Report

நாளை சந்திர கிரகணம் நிகழ இருப்பதால், திருப்பதி கோவில் மூடப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

சந்திர கிரகணம்

சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வருவதை தான் சந்திர கிரகணமாகும். இந்நிகழ்வு பௌர்ணமி அன்று நிகழும்.

சூரியனின் ஒளி சந்திரன் மீது முழுமையாக விழுந்தால் அது முழு சந்திர கிரகணம் என்று அழைக்கப்படும். சந்திரனின் ஒரு பகுதியை மறைத்தால் அது பகுதிநேர சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகின்றது.

earth-india-andhra-pradesh-tirupati

திருப்பதி கோவில் மூடல்

இந்நிலையில், நாளை பிற்பகல் மணி 2.39க்கு துவங்கி மாலை 6.19 மணி வரை சந்திர கிரகணம் நிகழ இருக்கிறது.

நாளை (நவம்பர் 8ம் தேதி) சந்திர கிரகணம் என்பதால் வரை திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்பட திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான அனைத்து கோவில்களிலும் 11 மணிநேரம் நடை அடைக்கப்பட உள்ளன.

எனவே, நாளை காலை 8.40 மணி முதல் 7.20 மணி வரை திருப்பதியில் நடை திறக்கப்படாது என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது.