ரூ.25,000 சம்பாதித்தாலே அதிக வருமானம் பெறுவோர் என்று அர்த்தம் - ஆய்வறிக்கையில் தகவல்..!
இந்திய மக்களிடையே நிலவும் பொருளாதார சமத்துவமின்மை குறித்த ஆய்வறிக்கையை பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு தலைவர் தேப் ராய் வெளியிட்டார்.
இதில் 2019 - 20 ஆம் ஆண்டிற்கான தொழிலாளர்கள் வருவாய் குறித்த புள்ளி விவரங்களும் இடம்பெற்றுள்ளன. இந்த ஆண்டில் ஒட்டுமொத்த ஊதியமாக 1869 லட்சம் கோடி ரூபாய் தொழிலாளர்களுக்கு தரப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

ஒருவர் மாதம் ரூ.25 ஆயிரம் சம்பளம் வாங்கினாலே அதிக வருவாய் பெறும் முதல் 10 சதவீத பட்டியலுக்குள் வந்துவிடுவார் என்று கூறப்பட்டுள்ளது.
தொழிலாளர்களில் 15 சதவீதம் பேர் 5 ஆயிரம் ரூபாய்க்கு கீழாகவே மாத வருமானம் ஈட்டுவதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த பட்டியலில் அதிக வருமானம் ஈட்டுவோர்களில் முதல் ஒரு சதவீத இடத்தில் இருப்பவர்கள் மட்டும் ரூ.127.48 லட்சம் கோடியை ரூபாயை ஈட்டியுள்ளனர்.

கடைசி 10 சதவீத விழுக்காடு பட்டியலில் இருப்பவர்கள் ரூ.324 லட்சம் கோடியை ஊதியமாக பெற்றுள்ளனர்.
கிராமப்புற மக்களை விட நகர்ப்புற மக்களின் சொத்து மதிப்பே அதிகம் உள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி,பஞ்சாப்,சண்டிகர்,கோவா சிறப்பிடம் பெற்றுள்ளதாகவும் ஜார்க்கண்ட்,பீகார் மாநிலங்கள் கடைசி இடம் பெற்றுள்ளது.