போட்ட ப்ளான் எல்லாம் போச்சே..! துணிவு, வாரிசு பட அதிகாலை காட்சிகள் ரத்து - தமிழக அரசு அதிரடி
துணிவு, வாரிசு திரைப்படங்களின் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதியில்லை என வருவாய்துறை இணை இயக்குநர் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதிகாலை காட்சிகள் ரத்து
பொங்கல் பண்டிகையை அடுத்து நாளை வெளியாக இருந்த துணிவு, வாரிசு திரைப்படங்களின் அதிகாலை காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான நடிகர் விஜய் நடித்த வாரிசு, மற்றும் அஜித் நடித்த துணிவு திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் பல்வேறு சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்துார், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் ரசிகர்கள் பேனர்களை வைத்து வருகின்றனர்.
இதனிடையே நாளை இரண்டு திரைப்படங்களும் வெளியாக உள்ள நிலையில் அதிகாலை காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து வருவாய் துறை இணை இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் ஜனவரி 13 முதல் ஜனவரி 16 ஆம் தேதி வரை துணிவு, வாரிசு படங்களுக்கான சிறப்பு காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
4 நாட்களிலும் அதிகாலை 4 மற்றும் 5 மணி சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
திரையரங்கு நுழைவாயில்களில் பெரிய பேனர் வைப்பதற்கும் பால் ஊற்றுவது போன்ற செயல்களுக்கும் அனுமதியில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் ஜனவரி 13, 14, 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் அதிகாலை 4 மற்றும் 5 மணி காட்சிகளுக்கு அனுமதியில்லை.
மேலும் தடைகளை மீறி பெரிய பேனர்கள் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்களின் டிக்கெட் விலை அதிகளவில் விற்றால் புகார் அளிக்கலாம் எனவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.