மொய் பணத்தை கணினியில் பதிவு செய்து ரசீது சீட்டு - வித்தியாசமாக நடைபெற்ற காதணி விழா!
ராமநாதபுரத்தில் அ.தி.மு.க நிர்வாகி இல்லத்தில் காதணி விழா நடைபெற்றது. அந்த விழாவில் கணினி மூலம் மொய் பணம் பெறப்பட்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கணினியில் பதிவு செய்து ரசீது சீட்டு
ராமநாதபுரத்தில் அ.தி.மு.க நிர்வாகி இல்லத்தில் காதணி விழா மண்டபத்தின் ஒரு ஓரத்தில் மூன்று லேப்டாப்கள், பிரின்டர், பணம் என்னும் எந்திரத்துடன் இளைஞர்கள் அமர்ந்திருந்தனர். அவர்களுடன் விழா ஏற்பாட்டாளரின் உறவினர்கள் அமர்ந்திருந்தனர்.
விழாவிற்கு வந்தவர்கள் விழா ஏற்பாட்டாளரின் உறவினரிடம் மொய் பணத்தைக் கொடுத்தார். அவரது பெயர் விவரம் கேட்டு அறிந்து, அருகில் லேப்டாப்புடன் அமர்ந்திருந்த இளைஞரிடம் தெரிவித்து, கணினியில் பதிவு செய்தார்.
உடனே மொய் வைத்தவருக்கு ரசீது கொடுக்கப்பட்டு, செல்போன் எண்ணுக்கும் அது குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்பட்டது.
முதன் முறையாக ராமநாதபுரம் மாவட்டத்தில் கம்ப்யூட்டர் மூலம் மொய் பணம் பெறப்பட்டது விழாவிற்கு வந்தவர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.