கிரேன் மூலம் 15 அடி உயர மாலையுடன் வந்த சீர்வரிசை - ஊரையே வாய் பிளக்கவைத்த தாய்மாமன்!
தாய்மாமன் 15 அடி உயர மாலையுடன் சீர்வரிசை செய்த செய்த சம்பவம் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
காதணி விழா
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்து உள்ள புன்னை கிராமத்தை சேர்ந்தவர் சாமி அய்யப்பன். இவரது அக்கா அவரது கணவருடன் சென்னையில் வசித்து வருகின்றனர், இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளது.
அவர்களுக்கு வந்தவாசியில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் காதணி விழா நடைபெற்றது. இதனால் தாய்மாமன் சீரை வித்தியாசமாக ஊரையே அதிர வைக்கும்படி செய்ய முடிவு செய்தார்.
சீர்வரிசை
இந்நிலையில், தாய்மாமன் சீர் கொண்டு செல்வதற்கு 15 அடி உயரத்தில் மாலை ஒன்று தயார் செய்து கிரேன் மூலம் ஊர்வலமாக எடுத்துச் சென்றார். பின்னர், வந்தவாசி ஈஸ்வரன் கோவிலில் இருந்து திருமண மண்டபம் வரை சுமார் 1 கிலோமீட்டர் தூரம் ஊர்வலமாக சென்றார்.
தொடர்ந்து, அவர் 3 குழந்தைகளையும் டிராக்டர் டிரைலரில் அமரவைத்து 100-க்கும் மேற்பட்ட சீர்வரிசைகளுடன் ஊர்வலமாக சென்றார். இதனை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர், மேலும், இது பரவிவரும் நிலையில் மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.