குழந்தையை தூக்கிச் சென்ற கழுகு - இணையத்தில் வைரலான வீடியோ
விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை கழுகு ஒன்று தூக்கிச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
ழுகு 500 அடி உயரத்தில் பறந்தாலும் தரையில் கிடக்கும் தன் இரையை சரியாக பார்த்து அதை மேலிருந்து கீழே வந்து கொத்தி தின்பது வழக்கம். அந்த வகையில் ஒருவருக்கு பார்வை மிக தெளிவாக இருந்தால் அதனை நாம் கழுகுப் பார்வை என வர்ணிப்போம். ஆனால் கழுகு ஒரு குழந்தையை தூங்கி பறந்து செல்ல முயன்றது என உங்களால் நம்ப முடிகிறதா?
இன்ஸ்டாகிராமில் nature27_12 என்ற பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்று சமீபத்தில் பதிவிடப்பட்டது. அதில் ஒரு பூங்காவில் தன் குழந்தையுடன் வந்த தந்தை குழந்தையை அங்கு அமர வைத்து விட்டு அவர் கொண்டு வந்த பையில் தான் கொண்டு வந்த ஏதோ பொருளை எடுக்க சென்றிருந்தார். அப்பொழுது அவர் குழந்தையை தனியாக விட்டிருந்தார்.
அந்த சமயம் பார்த்து வந்த கழுகு குழந்தையை தூக்கி செல்ல முயன்று குழந்தையை ஆடையை தன் காலால் கொத்தி தூக்கி சென்றது. குழந்தையை சற்று உயரத்திற்கு கொண்டு சென்ற பின்பு குழந்தையை எடை தாங்க முடியாமல் கீழே போட்டது.
முதலில் இதை கவனிக்காத அந்த தந்தை குழந்தையை கழுகு சற்று உயரத்திற்கு கொண்டு சென்ற பின்பு தான் கவனித்தார். பின்னர் குழந்தை எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததும் குழந்தை தூக்கி குழந்தைக்கு ஏதேனும் அடிபட்டுள்ளதா என பார்த்துள்ளார். இந்த வீடியோ வெளியாகி வைரலான நிலையில் அந்த தந்தையை பலரும் விமர்சித்துள்ளனர்.