அண்ணாமலை சொல்வதை எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுக்க சொல்லுங்கள்... - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

E. V. K. S. Elangovan K. Annamalai
By Nandhini Oct 18, 2022 04:16 AM GMT
Report

இந்தி திணிக்கப்பட்டால் தமிழக பாஜக எதிர்க்கும் என்று கூறிய அண்ணாமலை எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுக்க வேண்டும் என்று ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்திருக்கிறார்.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தல்

இன்று நாடு முழுவதும் அகில இந்திய காங்கிரஸ் தலைவருக்கான தேர்தல் நடந்தது. இதனையடுத்து, சென்னை சத்தியமூர்த்தி பவனில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கு வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

சென்னை சத்தியமூர்த்தி பவனிற்கு வந்து தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் வருகை தந்து வாக்களித்தனர். வாக்களிக்க வந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் வாக்களித்துவிட்டு, செய்தியாளர்களை சந்தித்தார்.

e-v-k-s-elangovan-k-annamalai

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பேட்டி 

அப்போது, அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் - 

நாட்டில் ஜனநாயகத்தை பின்பற்றும் கட்சி காங்கிரஸ் தான். பாஜகவால் நாட்டிற்கு எந்த பயனும் இல்லை. மத்திய அரசு இந்தியை திணித்தால் தமிழ்நாட்டில் எதிர்ப்பு குரல் பொங்கி எழும். இந்தி திணிக்கப்பட்டால் தமிழக பாஜக எதிர்க்கும் என்று அண்ணாமலை சொல்லிக்கொண்டு வருகிறார்.

இப்படி சொல்லிக்கொண்டு இருக்கிறாரே அண்ணாமலை, அவரை எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் அண்ணாமலை வழக்கமாக பேசும் பொய்யில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்றார்.