ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மாபெரும் வெற்றி...!
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார்.
காங்கிரஸ் முன்னிலை
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 27 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இந்த வாக்குகளை எண்னும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. தற்போதுவரை 5 சுற்று வாக்குகள் எண்ணப்பட்டுள்ளது. வாக்கு எண்ணப்பட்டதிலிருந்து காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்தார்.
இதற்கிடையில், ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை 80 சதவீதம் நிறைவேற்றி இருக்கிறார். அதன் எதிரொலியாக இந்த வெற்றி என்றார்.
அமைச்சர்கள் வாழ்த்து
இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முன்னிலை வகித்துவரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து டி.ஆர். பாலு, அன்பழகன், கே.என்.நேரு உட்பட அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மாபெரும் வெற்றி
இந்நிலையில், தற்போது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் வெற்றி பெற்றுள்ளார். ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 51,168 வாக்குகுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
11வது சுற்றில், காங்கிரஸ் - 83,528 வாக்குகளும், அதிமுக 32,360 வாக்குகளும் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணிக்கையில், 50,000+ வாக்குகள் வித்தியாசத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தொடர்ந்து முன்னிலையில் வெற்றி பெற்றுள்ளார்.