சிம் கார்டே இல்லாமல் வெளியாகும் ஐபோன் - எதிர்பார்ப்பில் பயனாளர்கள்
சிம் இல்லாத மொபைல் போனை உருவாக்க ஆப்பிள் ஐபோன் நிறுவனம் முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
2018 ஆம் ஆண்டு அறிமுகமான ஐஃபோன் எக்ஸ் எஸ் மாடலில் இருந்தே இ-சிம் என்ற தொழில்நுட்பத்தை ஆப்பிள் நிறுவனம் அளித்து வருகிறது. ஆனால் அவற்றில் இ-சிம் தேர்வு செய்யப்பட்டாலும் நானோ சிம் கார்டுக்கான இடமும் இருக்கும்.
இதனிடையே ஆப்பிள் ஐபோன் நிறுவனம் ஒவ்வொரு முறையும் புதிய சீரியஸ் ஐபோன்களை வெளியிடும்போது புதுப்புது அம்சங்கள் இடம்பெறுவது வழக்கம். அந்த வகையில் புத்தாண்டில் அறிமுகமாகப் போகும் ஆப்பிள் ஐபோன் 14ல் மின்னணு சிம்கார்டு மட்டுமே இடம்பெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த முறையில் உருவாகும் ஆப்பிள் ஐபோன் வெற்றிகரமாக செயல்பட்டால் அதனை அடுத்து ஆண்ட்ராய்டு மொபைல் உள்பட அனைத்து வகைகளிலும் இ-சிம் பயன்படுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.