தமிழகத்தில் இன்று முதல் அமலுக்கு வருகிறது இ-பதிவு நடைமுறை
தமிழகம் முழுவதும் இன்று முதல் மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இ-பதிவு நடைமுறை அமலுக்கு வருகிறது.
கொரோனா இரண்டாம் அலையால் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில் பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கை அறிவித்துள்ளது.
அதன் ஒரு அங்கமாக இன்று முதல் இ-பதிவு முறை அமலுக்கு வருகிறது. ஆனால் இ-பாஸ் நடைமுறை அல்ல இது. இ-பாஸ் நடைமுறைக்கும். இ-பதிவு நடைமுறைக்கும் வேறுபாடு உள்ளது.
கடந்த ஆண்டு நடைமுறையில் இருந்த இ-பாஸ் முறையில் ஆவணங்களை சமர்பித்து அதனை அதிகாரிகள் சரிபார்த்து ஒப்புதல் அளித்தால் மட்டுமே பயணிக்க முடியும்.
ஆனால் இ-பதிவு நடைமுறை என்பது எளிமையானது. இணையத்தில் பதிவு செய்தாலே அதற்கான ஒப்புதல் சான்று கிடைத்துவிடும். அதை பயணித்தின்போது வைத்துக் கொண்டு உரிய ஆவணங்களுடன் சோதனையின்போது காண்பித்தால் போதுமானது.
மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க தமிழக அரசு அறிவித்துள்ள காரணங்களுக்கு உரிய சான்றுகள் இருந்தால் அதனை வைத்துக் கொண்டு பயணங்கள் மேற்கொள்ளலாம்