இ-பதிவு முறையில் மாற்றம்? மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பதிவு ரத்து?

e - register cancel soon
By Anupriyamkumaresan Jun 11, 2021 07:38 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in சமூகம்
Report

தமிழகத்தில் இ-பதிவு முறையில் மாற்றம் கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்துள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த மாதம் முதல் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதனால் மாவட்டத்திற்கு செல்வதற்கும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கும் இ - பதிவு அவசியம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் இ-பதிவு முறையில் மாற்றம் கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இ-பதிவு முறையில் மாற்றம்? மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பதிவு ரத்து? | E Register Soon Cancel For District To District

இதில் முதல் கட்டமாக கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்களில், பயணம் செய்வதற்கான இ-பதிவு நடைமுறை ரத்தாகும் என தலைமைச் செயலக வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது .

அதன் பின்னர் படிப்படியாக அனைத்து பகுதிகளுக்கும் இ-பதிவு முறையை ரத்து செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.