2 ஆக உடைந்த எலக்ட்ரிக் பைக் - அடுத்த சர்ச்சையில் சிக்கியதால் பரபரப்பு

ola ebike olaebike
By Petchi Avudaiappan Apr 16, 2022 07:18 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

மின்சார இருசக்கர வாகனம் இரண்டாக உடைந்த சம்பவம் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கடந்த ஓராண்டுகளாகவே மின்சார இரு சக்கர வாகனத்தின் மீது மக்களின் ஆர்வம் அதிகரித்துள்ளதை உணர்ந்த பல நிறுவனங்கள் மின்சார வாகன தயாரிப்பில் களமிறங்கியுள்ளன.இதில் முன்னிலையில் OLA நிறுவனம் இருக்கிறது.

அதன்படி 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை மற்றும் பெங்களூருவில்  இந்நிறுவனம் தனது விற்பனையை தொடங்கியது. அதில் இருந்து மின்சார வாகனத்தில் மீது தொழில் நுட்ப புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன. 

இதனைத் தொடர்ந்து கடந்த 2 மாதங்களில்  மின்சார இரு சக்கர வாகனங்கள் அடிக்கடி தீப்பிடிக்கும் செய்தி பொதுமக்களிடையெ பீதியை ஏற்படுத்தியிருந்தது. இதனால் மின்சார இரு சக்கர வாகனங்களை வாங்க முன்வந்த பலரும் தயக்கம் காட்ட தொடங்கினர். 

இந்நிலையில் மின்சார இரு சக்கர வாகனம் இரண்டாக உடைந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நவீன் யூ மேத்தா என்ற நபர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு OLA நிறுவனத்தின் மின்சார இரு சக்கர வாகனத்தை வாங்கியுள்ளார்.

இந்த வாகனம் வாங்கியதில் இருந்தே தொடர்ந்து பிரச்சனைகள் இருந்து வந்துள்ளது. ஒவ்வொரு முறையும் புகார் தெரிவித்தபோது அதை சரி செய்து கொடுத்துள்ளனர். இருப்பினும் தொடர்ந்து வாகனத்தில் பிரச்சனை இருந்துள்ளது. இதனையடுத்து நவீன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது தீடிரென வாகனத்தின் முன்பகுதி உடைந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதனால் அதிர்ச்சிக்குள்ளான அவர் OLA நிறுவனத்திற்கு அவர் புகார் அளித்துள்ளார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தனது சமூகவலைதள பக்கத்திலும் பதிவிட்டுள்ளது இணையத்தில் வைரலாகியுள்ளது.