பிறப்பதற்கும், இறப்பதற்கும் இந்த ஊரில் தடை - ஆனால், மக்கள்தொகை..
நாடு ஒன்றில் உயிரிழக்கத் தடை விதிக்கும் சட்டம் உள்ளது.
அதிகமான குளிர்
நார்வே நாட்டிற்குச் சொந்தமான தீவு ஸ்வால்பார்ட். அந்தத் தீவில் உள்ள நகரம் லாங்யர்பியன். இங்கு இறப்பது என்பது சட்டவிரோதமானது. உலகில் மிகவும் குளிரான இடங்களில் ஒன்று.
குளிரான நாட்களில் -46.3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் போகும். வெப்பமான நாட்களிலும் கூட அதிகபட்ச வெப்பமே 3-7 டிகிரி செல்சியஸ் வரை மட்டுமே இருக்கும். இங்கு ஓவர் குளிர் இருப்பதால் உடல் மக்கிப் போகாது. சதை மற்றும் எலும்புகள் மட்டுமின்றி அதில் இருக்கும் பாக்டீரியா, வைரஸ் கூட அப்படியே இருக்கும்.
புதைப்பதில் சிக்கல்
இங்குப் புதைக்கப்பட்ட உடலை எடுத்து ஆய்வு செய்த போது பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்கள் கூட அப்படியே இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாகவே இந்த நகரின் எல்லைகளுக்குள் உடலைப் புதைக்கக்கூடாது என்று சட்டம் கொண்டு வரப்பட்டது.
மேலும், நகரில் இருந்த கல்லறைகளும் மூடப்பட்டன. எனவே, லாங்யர்பியனில் உயிரிழக்கும் தறுவாயில் இருக்கும் மக்கள் நார்வே நாட்டின் பிரதான நிலப்பகுதிக்கு 2000 கி.மீ தூரம் கொண்டு செல்லப்படுகிறார்கள். அங்கு உயிரிழந்த பிறகு உடல் புதைக்கப்படும்.
மேலும் இங்கு பிரசவத்திற்குச் சரியான மருத்துவ வசதிகள் இல்லாததால், கர்ப்பிணிப் பெண்கள் இங்குக் குழந்தை பெறுவதில்லை. கர்ப்பிணிப் பெண்கள் பிரசவத் தேதிக்கு ஒரு மாதத்திற்கு முன்பு நார்வேயின் பிரதானப் பகுதிக்குச் சென்றுவிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.