சர்வதேச போட்டிகளில் இருந்து பிராவோ ஓய்வு - ரசிகர்கள் அதிர்ச்சி

Retires Dwayne Bravo International Competitions
By Thahir Nov 05, 2021 06:03 AM GMT
Report

சர்வதேச போட்டிகளில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்-ரவுண்டர் டுவெயின் பிராவோ ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்-ரவுண்டர் டுவெயின் பிராவோ நடப்பு டி20 உலகக்கோப்பையில் விளையாடி வருகிறார்.

இவர் இதுவரை 90 டி-20 போட்டிகளில் விளையாடி 1245 ரன்கள் குவித்து 78 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2200 ரன்களும், 86 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

164 ஒருநாள் போட்டிகளில் ஆடி 2968 ரன்களும், 199 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்நிலையில், 38 வயதான டுவெயின் பிராவோ சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக பிராவோ அறிவித்துள்ளார்.

இதன் மூலம் ஆஸ்திரேலியாவுடன் நாளை வெஸ்ட் இண்டீஸ் மோதும் போட்டியே பிராவோவின் கடைசி சர்வதேச போட்டியாகும். அவரின் ஓய்வு அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.