சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து டுவைன் பிராவோ நீக்கம் - ரசிகர்கள் அதிர்ச்சி

MS Dhoni Chennai Super Kings Dwayne Bravo IPL 2023
By Thahir Nov 15, 2022 01:47 PM GMT
Report

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த ஆண்டு போட்டியாளர்கள் பட்டியலில் இருந்து டுவைன் பிராவோ நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிராவோ விடுவிப்பு 

2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கான ஏலம் டிசம்பர் மாதம் 23ம் தேதி நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்த ஏலமானது கேரளா மாநிலம் கொச்சியில் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் பங்கேற்க உள்ள அணிகள் தக்க வைக்க உள்ள வீரர்களின் பட்டியலை இன்றைக்குள் வெளியிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல் ரவுண்டரான டுவைன் பிராவோ நீக்கப்பட்டுள்ளார்.

Dwayne Bravo released from Chennai Super Kings

வீரர்களை தக்க வைப்பதற்கான காலக்கெடு இன்று மாலையுடன் முடிந்துள்ளதால் விரைவில் அனைத்து அணிகளும் தாங்கள் தக்க வைத்த வீரர்களின் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிடும் என்று தெரிகிறது.

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட உள்ள வீரர்களின் உத்தேச பட்டியல் இங்கு கீழே பார்க்கலாம்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து டுவைன் பிராவோ நீக்கம் - ரசிகர்கள் அதிர்ச்சி | Dwayne Bravo Released From Chennai Super Kings

உத்தேச பட்டியல் 

ருதுராஜ் கெய்க்வாட்

எம் எஸ் தோனி

சுப்ரான்சு சேனாபதி

டெவோன் கான்வே

அம்பதி ராயுடு

ரவீந்திர ஜடேஜா

மொயின் அலி

மிட்செல் சான்ட்னர்

டுவைன் பிரிட்டோரியஸ்

சிவம் துபே

பிரசாந்த் சோலங்கி

முகேஷ் சவுத்ரி

மதீஷ பத்திரன

ராஜ்வர்தன் ஹங்கர்கேகர்

சிமர்ஜீத் சிங்

மகேஷ் தீக்ஷனா

துஷார் தேஷ்பாண்டே