ஐபிஎல் கோப்பையை வென்ற சென்னை அணி - பேருந்தில் கச்சேரி நடத்திய பிராவோ: வைரல் வீடியோ
ஐபிஎல் கோப்பையை வென்ற சென்னை அணியை உற்சாகப்படுத்தும் விதமாக பிராவோ செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று நடைபெற்ற நடப்பு 14வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 4வது முறையாக சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.
இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு சென்னை அணியின் பேருந்தில் உற்சாகமாக வெற்றிக் கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது. அந்த அணியின் நட்சத்திர வீரர் ட்வைன் பிராவோ, தானாகவே பாடல் ஒன்றை பாடி அதற்கு குத்தாட்டமும் போட்டுள்ள வீடியோவை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் டுவைன் பிராவோ, we are kings, we are the kings, Chennai super kings என புகழ்ந்து தள்ளியுள்ளார். குறிப்பாக பேருந்தில் கடைசி இருக்கையில் அமர்ந்திருந்த தோனி குறித்தும் அவர் புகழ்ந்து பாடியது, அணி வீரர்கள் அனைவருக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
டி20 உலகக்கோப்பை முடிந்தவுடன் தோனி இந்தியா திரும்பியதும் சென்னையில் சென்னை அணியின் வெற்றி கொண்டாட்டத்தை பிரமாண்டமாக நடத்த சென்னை அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் விமான நிலையம் அருகே குண்டு வெடிப்புகள்..! சிறிலங்கா எயார்லைன்ஸின் அவசர அறிவிப்பு IBC Tamil
