எங்கள பார்த்து வயசான டீம்னு சொன்னாங்க ஆனா சம்பவம் பண்ணிட்டோம் - டூவைன் ப்ராவோ

MS Dhoni CSK Speech Dwayne Bravo
By Thahir Dec 08, 2021 07:56 AM GMT
Report

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ பத்திரிகையாளர்களின் சந்திப்பின்போது 2021 ஐபிஎல் தொடரில் சென்னை அணி வெற்றி பெற்றது குறித்து தனது கருத்தை பேசியுள்ளார்.

2020ஆம் ஆண்டு யாருமே எதிர்பாராத வகையில் சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது.

இந்த ஒரு சம்பவம் கிரிக்கெட் வட்டாரங்களில் மட்டுமில்லாமல் ரசிகர்கள் மத்தியிலும் மிகப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

எப்பொழுதுமே மாஸ் காட்டும் சென்னை அணி 2020ஆம் ஆண்டு பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் தோல்வியை தழுவியதற்கு முக்கிய காரணம், அந்த அணியில் பெரும்பாலான வீரர்கள் வயது முதிர்ந்தவர்களாக உள்ளது தான் என்ற சர்ச்சையான கருத்தும் கிரிக்கெட் வட்டாரத்தில் உலவி வந்தது.

குறிப்பாக சென்னை அணியில் ரவீந்திர ஜடேஜா மஹேந்திரசிங் தோனி, டுவைன் பிராவோ, டுப்லஸ்ஸிஸ், சுரேஷ் ரெய்னா போன்ற முக்கியமான வீரர்கள் 30 வயது கடந்தவர்கள், வயதாகிவிட்டதால் இவர்களால் சிறப்பாக செயல்பட முடியவில்லை என்று பெரும்பாலானவர்கள் பேசி வந்தனர்.

அப்படி தங்களை விமர்சித்தவர்களை வாயடைக்கும்படி சென்னை அணி 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டைட்டில் பட்டத்தை வென்று சாதனை படைத்தது.

இந்நிலையில் தனது அணி வெற்றி பெற்றது குறித்து சென்னை அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது மனம் திறந்து பேசியுள்ளார்.

அதில்,” 2020ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியவுடன் அனைவரும் சென்னை அணி வயதானவர்களை கொண்ட அணியாக திகழ்வதால் தோல்வியை தழுவியது என்று விமர்சனம் செய்தார்கள்.

ஆனால் அப்படி பேசியவர்களின் பேச்சை பொய்யாக்கும் படி 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் அதிரடியாக செயல்பட்டு சென்னை அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தது மிகப் பெரும் சந்தோஷத்தை கொடுத்துள்ளது என்று அதில் பேசியிருந்தார்.

மேலும் தோனி குறித்து பேசிய அவர், தோனி தனியாளாக நின்று சென்னை அணியை உருவாக்கினார் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் கிடையாது,

தோனியின் தலைமையின் கீழ் நாங்கள் அனைவரும் விளையாடியது எங்களுக்கு மிகப் பெரும் கவுரவத்தை கொடுத்துள்ளது” என்றும் பிராவோ தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.