உலகின் மிக குள்ளமான பசு மரணம்! அதே நேரத்தில் தமிழகத்தில் நடந்த அதிசயம்

By Fathima Aug 20, 2021 08:20 PM GMT
Report

வங்கதேசத்தில் மிகவும் குள்ளமான பசு என்றழைக்கப்பட்ட ராணி உயிரிழந்தது.

வங்கதேசத்தின் டாக்கா அருகே சாரிகிராமில் உள்ள ஷிகோர் வேளாண் பண்ணையில் ராணி என்ற பசு இருந்தது.

வெறும் 51 செ.மீ. உயரம், 66 செ.மீ. நீளம், 26 கிலோ எடை கொண்ட ராணி, உலகின் குள்ளமான பசு என்ற அங்கீகாரத்தை பெற்றது.

ராணியை பார்க்க தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகையும் தந்தனர்.

இந்நிலையில் வயிற்றில் அளவுக்கு அதிகமாக வாயு இருந்ததால் ராணி நேற்று பரிதாபமாக உயிரிழந்தது.

அதேவேளை தமிழகத்தில் மிக குள்ளமான கன்று ஒன்று பிறந்துள்ளது, கடலூர் மாவட்டம் நலன்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி விஜயனின் பசுவை இந்த கன்றை ஈன்றுள்ளது.

சுமார் ஒரு அடிக்கும் குறைவான உயரத்தில் பிறந்த இந்த கன்றுவால் பால் கூட குடிக்க முடியவில்லையாம்.

வங்கதேசத்தில் குள்ளமான பசு உயிரிழந்த அதே நாளில் தமிழகத்தில் குள்ளமான கன்று பிறந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.