உலக கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து ஆல்-ரவுண்டர் டுவைன் பிரிடோரியஸ் விலகல் - பேரதிர்ச்சியில் ரசிகர்கள்...!

South Africa National Cricket Team
By Nandhini Oct 12, 2022 12:47 PM GMT
Report

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து ஆல்-ரவுண்டரான டுவைன் பிரிடோரியஸ் விலகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி

ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 7-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொள்ள உள்ளன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட இருக்கிறது.

dwaine-pretorius

ஆல்-ரவுண்டர் டுவைன் பிரிடோரியஸ் விலகல்

இந்நிலையில் டி20 உலக கோப்பை போட்டியிலிருந்து ஆல்-ரவுண்டர் டுவைன் பிரிடோரியஸ் விலகியுள்ளார். இது அவரது ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான 3வது டி20 போட்டியின் போது இடது கட்டை விரலில் டுவைன் பிரிடோரியஸ்க்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் அவர் டி20 உலக கோப்பையிலிருந்து விலகுவதாக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்திருக்கிறது.