தீபக் சாஹரை தொடர்ந்து சென்னை அணியில் இருந்து விலகும் மற்றொரு வீரர் - அதிர்ச்சி தகவல்
ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் இருந்து தீபக் சாஹரை தொடர்ந்து மற்றொரு வீரர் விலகவுள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மார்ச் 26ஆம் தேதி தொடங்கி மே 29ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 10 அணிகள் பங்கேற்கும் நிலையில் இரண்டு குரூப்களாக பிரிக்கப்பட்டு தலா 5 அணிகள் இடம் பெற்றுள்ளன.
ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் இந்த தொடரை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ள நிலையில் சென்னை அணியில் ரூ.14 கோடிக்கு விலைக்கு வாங்கப்பட்ட தீபக் சாஹர் காயம் காரணமாக விலகியது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.
இந்நிலையில் தென்னாப்பிரிக்கா அணியைச் சேர்ந்த 32 வயதான பிரிடோரியஸ் இம்முறை சிஎஸ்கே அணிக்காக விளையாட ஏலத்தில் எடுக்கப்பட்டார். ஆனால் அந்த அணி வங்கதேச அணிக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் அடுத்ததாக விளையாடவுள்ளது. இதனால் தென்னாப்பிரிக்க அணியில் பிரிடோரியஸ் இணைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே மார்ச் 18 ஆம் தேதி முதல் ஏப்ரல் 12 ஆம் தேதி நடக்கவுள்ள ஐபிஎல் போட்டிகளில் அவர் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சென்னை அணி ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.