அரசு பணியில் இருந்து நிரந்தர நீக்கம் - நோட்டீஸை பெற மறுத்த சவுக்கு சங்கர்!

Tamil nadu Chennai
By Sumathi Sep 24, 2022 12:37 PM GMT
Report

சவுக்கு சங்கரை அரசு பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கி லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு துறை உத்தரவிட்டுள்ளது.

சவுக்கு சங்கர்

லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறையில் பணியாற்றி வந்த சவுக்கு சங்கர், அரசு ஆவணங்களை கசியவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டு, கடந்த 2008ம் ஆண்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனையடுத்து அவர் சவுக்கு ஆன்லைன் எனும் இணையதளம் தொங்கி, அரசிற்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

அரசு பணியில் இருந்து நிரந்தர நீக்கம் - நோட்டீஸை பெற மறுத்த சவுக்கு சங்கர்! | Dvac Dismisses Savukku Shankar

அதில் மக்களிடையே பிரபலமான அவர், சமீபகாலங்களில் யூட்யூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து வந்தார். அதில் அரசு மற்றும் நீதித்துறைக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வந்தார். இந்நிலையில் நீதிமன்றங்கள் குறித்து அவர் பேசிய கருத்துக்களில் அடிப்படையில்,

 நீதிமன்ற அவமதிப்பு

அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சவுக்கு சங்கருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை 6 மாதம் சிறை தண்டனை வழங்கியது. அதனை தொடர்ந்து கடலூர் மத்திய சிறையில் சவுக்கு சங்கர் அடைக்கப்பட்டார்.

2008ஆம் ஆண்டு அவர் மீது தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளதால், இதுவரையில் அரசு, அவருக்கு மாதம் ரூ.40,000 ஊதியமாக மாதம் வழங்கி வந்தது. இந்த நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஆஜரான சவுக்கு சங்கருக்கு எப்படி அரசு சம்பளம் வழங்கி வருகிறது.

பணி நீக்கம்

அவரை பணி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசிற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இந்த நிலையில் இன்று கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர், சிறையில் உள்ள சவுக்கு சங்கருக்கு பணிநீக்கம் செய்வதற்கான Show cause நோட்டீசை வழங்கினர்.

இந்த நோட்டீசை, சிறை அதிகாரியுடன் சேர்ந்து சவுக்கு சங்கருக்கு வழங்க சென்றபோது, அவர் அதனை வாங்க மறுத்துவிட்டார். இந்நிலையில் அந்த நோட்டீஸ் அவர் அடைக்கப்பட்டிருக்கும் சிறையின் அறை வாசலில் ஒட்டப்பட்டது.

நீதிமன்ற உத்தரவுப்படி சவுக்கு சங்கருக்கு முதற்கட்டமாக Show cause நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதனையடுத்து அவர் பணி நீக்கம் செய்யப்படுவார்.